மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

ஒரு பந்தில் நான்கு விக்கெட்டுகள்!

ஒரு பந்தில் நான்கு விக்கெட்டுகள்!

ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர், கெமரூன் பேன்க்ராஃப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டனர். இந்தக் குற்றம் பற்றித் தெரிந்தும், தடுக்காமல் இருந்ததற்காக ஸ்டீவ் ஸ்மித்துக்கும் சேர்த்து தண்டனை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரும் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, ஒரு பந்தை சேதப்படுத்தியதால் ஒரு அணியிலிருந்து நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை நான்காக உயர்த்தியிருக்கிறது

டெரன் லீமென் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருந்தாலும், கெமரூன் பேன்க்ராஃப்ட் - டேவிட் வார்னர் இடையே நடைபெற்ற பந்து சேதப்படுத்தும் சதித்திட்டத்தில் அவர் தொடர்புபடுத்தப்படவில்லை. அனைத்து வீரர்களையும் அழைத்து விசாரித்தபோதிலிருந்து, ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரையே அசைத்துப் பார்க்கும் விதத்தில் மூன்று பேருக்குத் தடை விதித்தவரை லீமெனுக்கு, பதவியை ராஜினாமா செய்யும் யோசனை இல்லை. ஆனால் ‘ஸ்மித், கெமரூன் பேன்க்ராஃப்ட் ஆகியோர் கண்ணீருடன் பத்திரிகையாளர் முன்பு பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். என் வீரர்கள் இப்படி கண்ணீர் சிந்தும் நிலைக்கு ஆளான பிறகும், நான் இந்தப் பயிற்சியாளர் பொறுப்பிலிருப்பதில் அர்த்தமில்லை. இந்தச் சம்பவம் நடைபெற்ற சனிக்கிழமைக்குப் பிறகு நான் உறங்கினேனா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது” என்று தனது பாதிப்பின் அளவை, இயல்பு வாழ்க்கையை வாழ முடியாததிலிருந்து எடுத்துக் கூறினார் லீமென்.

“இனி எப்படிப்பட்ட இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளப் போகிறார்?” என்று கேட்டபோது, “வருடத்தில் 300 நாள்கள் சுற்றிக்கொண்டிருந்த காலங்கள் போதும் எனத் தோன்றுகிறது. குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும். அவர்களும் அதையே விரும்புகிறார்கள். என் மகன் எப்படி கிரிக்கெட் விளையாடுகிறான் எனப் பார்க்க வேண்டும்” என்று லீமென் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலிய பயிற்சியாளராகப் பணியாற்றிய காலத்தில் மறக்கமுடியாத நிகழ்வுகள் பற்றி பேச்சு திசை திரும்பியபோது, “இரண்டு ஆஷஸ் போட்டிகளை வென்றது மறக்க முடியாதது. ஆனால், என் வாழ்க்கைப் பயணத்திலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றிலும் சரி... என்றுமே மாற்ற முடியாத ஒன்று என்றால் அது ஃபிலிப் ஹுக்ஸ் மரணம்தான். நாங்கள் எப்படி செயல்பட்டோம் என்பதை உலகம் பார்த்தது. ஆனால், மன ரீதியாக அதிலிருந்து வெளியே வர என் வீரர்கள் எவ்வளவு உழைத்தார்கள் என்பது எனக்குத் தான் தெரியும்” என்று உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கூறினார்.

"இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில் இந்த ராஜினாமா தேவையா? இது மேலும் நெருக்கடியைத் தராதா?" என்று கேட்டதற்கு "நெருக்கடியான சூழலில் விளையாட்டின் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். எனவே, இந்த நெருக்கடி நிலை அவர்களைத் தெளிவாகச் சிந்திக்கவைக்கும்" என்று கூறியிருக்கிறார்.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வெள்ளி 30 மா 2018