மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020

சிறப்புப் பொருளாதார மண்டல ஏற்றுமதி உயர்வு!

சிறப்புப் பொருளாதார மண்டல ஏற்றுமதி உயர்வு!

சென்ற பிப்ரவரி மாதத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் வெளியிட்ட ஏற்றுமதி செயல் திறன் அறிக்கையில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது: 'சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலிருந்து மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியின் அளவு 2017ஆம் ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது 2018 பிப்ரவரியில் 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மின்னணு பொருட்கள், ஆற்றல் சாதனங்கள், புகையிலைப் பொருட்கள் போன்றவையே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் புதுமையான ஆற்றல் பொருட்கள் ஏற்றுமதி 539 சதவிகிதமும், மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி 362 சதவிகிதமும், புகையிலைப் பொருட்கள் ஏற்றுமதி 173 சதவிகிதமும், வர்த்தகம் மற்றும் சேவைப் பொருட்கள் ஏற்றுமதி 60 சதவிகிதமும், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் ஏற்றுமதி 25 சதவிகிதமும், பொறியியல் சாதனப் பொருட்கள் 22 சதவிகிதமும், கெமிக்கல் மற்றும் ரசாயனங்கள் ஏற்றுமதி 21 சதவிகிதமும், கணினி மற்றும் மென்பொருள் சாதனங்கள் ஏற்றுமதி 7 சதவிகிதமும், நகைகள் மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி 7 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.'

2017 ஏப்ரல் முதல் 2018 பிப்ரவரி வரையிலான காலத்தில் அதிகம் ஏற்றுமதி செய்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஃபால்டா (மேற்கு வங்க சிறப்புப் பொருளாதார மண்டலம்) முதலிடத்திலும், கொச்சின் இரண்டாவது இடத்திலும், விசாகப்பட்டினம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதிகளவில் இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்த நாடுகளாக இங்கிலாந்து, பெல்ஜியம், சிங்கப்பூர், சீனா, மலேசியா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon