மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

கிச்சன் கீர்த்தனா: மாங்காய் வத்தல் ஊறுகாய்!

கிச்சன் கீர்த்தனா: மாங்காய் வத்தல் ஊறுகாய்!

தேவையானவை:

மாங்காய் வத்தல் - 8 துண்டுகள்

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 10 பல்

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 3 தேக்கரண்டி

தேங்காய்த்துருவல் - 3 தேக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி

வெந்தயம் - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 3 மேஜைகரண்டி

செய்முறை:

மாங்காய் வத்தலை 15 நிமிடம் வெந்நீரில் ஊற விடவும்.

தேங்காயை அரைத்து வைத்துக்கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு வதக்கவும்.

புளியைக் கரைத்து ஊற்றி அரைத்த தேங்காயைச் சேர்க்கவும்.

மாங்காய் வத்தல், உப்பு சேர்க்கவும்.

அடுப்பைக் குறைந்த தணலில் வைத்து கொதிக்க விடவும்.

சுவையான மாங்காய் வத்தல் ஊறுகாய் தயார்.

கீர்த்தனா சிந்தனைகள்:

உலகத்துலயே சொல் பேச்சு கேட்காத ஒரே விலங்கு ஆடு தான்!

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வெள்ளி 30 மா 2018