மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

கோபத்தில் கௌதம் மேனன்

கோபத்தில் கௌதம் மேனன்

கௌதம் வாசுதேவ் மேனன் செம கோபத்தில் இருப்பதாகச் சொல்லி வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்திருக்கிறார். கௌதம் தயாரிப்பில் உருவான நரகாசூரன் திரைப்படப் பிரச்சினை இன்னும் ஓயாத நிலையில், அதற்குள் இன்னொரு பிரச்சினையா என்று பார்த்தவர்கள் அனைவருக்கும் அயர்ச்சியே ஏற்பட்டது.

“சென்னையில்தான் பிறந்தேன். இப்ப இருக்கேன். ரொம்ப நாளா இருக்கேன். எனக்கொரு கோபம் இருக்கு. சென்னை மேல ஒரு கோபம் இருக்கு. அதைப்பத்திப் பேசப் போறேன்” என்றவாறு அந்த வீடியோவை முடித்திருக்கிறார்கள். இந்த வீடியோவை வெளியிட்டபோது “முக்கியமான ஒன்றை நோக்கி நகர்கிறேன்” என்று கூறியிருக்கிறார் கௌதம் மேனன்.

அப்படி என்ன கௌதம் மேனன் சொல்லப்போகும் முக்கியமான கோபம் என்று ஒருபக்கமும், அப்போது கார்த்திக் நரேனின் பிரச்சினை முக்கியமானது இல்லையா என்று இன்னொரு பக்கமும் விவாதங்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் கௌதம் மேனன் ஈடுபட்டார் அல்லவா? அந்த விபத்து குறித்த அனுபவத்தை அறிவுரைகளாகப் பகிர்ந்துகொள்ளப் போகிறார் என்ற புது தகவலும் வெளியாகியிருக்கிறது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon