மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

தமிழிசைக்குத் தெரியாமல்... காவிரியிலும் கோஷ்டி பூசல்!

தமிழிசைக்குத் தெரியாமல்... காவிரியிலும்  கோஷ்டி பூசல்!

காவிரி விவகாரத்தில் தமிழகத்திலுள்ள கட்சிகள் எல்லாம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று போராட்டத்தில் குதிக்க... மத்திய ஆளுங்கட்சியான பாஜக, கர்நாடகத் தேர்தலுக்காக எடுத்த முடிவால் தமிழக பாஜக இந்த விஷயத்தில் பதிலேதும் சொல்ல முடியாமல் ஏதேதோ சொல்லி சமாளித்து வருகிறது.

இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் பாஜகவுக்குள் நிலவும் கோஷ்டி பூசலும் மாநிலத் தலைவர் தமிழிசைக்குத் தலைவலியை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக பாஜக சார்பில் கடந்த 26ஆம் தேதி ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி, பொன்னாரின் தீவிர ஆதரவாளரான முத்துப்பேட்டை கருப்பு முருகானந்தம், பாஜகவின் விவசாய அணித் தலைவர் விஜயராகவன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழு கடந்த 28ஆம் தேதி டெல்லியில் மத்திய அமைச்சர் பொன்னாரோடு சேர்ந்து, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்தது. இந்தச் சந்திப்பு மீடியாக்களில் வெளிவந்த பிறகுதான் மாநிலத் தலைவர் தமிழிசைக்கே தெரியும் என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்.

“தமிழக பாஜகவில் தமிழிசைக்கும் பொன்னாருக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது. எம்.பி ஆனதில் இருந்து இதில் இல.கணேசனும் சேர்ந்துகொண்டு விட்டார். தமிழ்நாட்டில் பற்றி எரியும் காவிரி பிரச்சினைக்காக மத்திய அமைச்சரைச் சந்திக்க தமிழக பாஜக குழு செல்லும்போது, அதுபற்றி தமிழகத் தலைவர் தமிழிசைக்குத் தெரிவிப்பதுதானே முறை? ஆனால், தமிழிசைக்கே தெரியாமல், டெல்லியில் தங்களின் செல்வாக்கைக் காட்டுவதற்காக காவிரி விவகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். காவிரி விஷயத்தில் ஒட்டுமொத்த கட்சிகளும் பாஜகவைக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கையில், பாஜகவோ இதிலும் கோஷ்டி பூசலை மனதில் வைத்துச் செயல்படுவது வேதனை. இதுபற்றி தமிழிசை தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார்” என்கிறார்கள்.

தனக்குத் தெரியாமலேயே பாஜக குழு கட்கரியைச் சந்தித்த விஷயம் தெரிந்த பிறகு உடனடியாக டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைப் பார்த்து அழுத்தம் கொடுக்க முயற்சித்திருக்கிறார் தமிழிசை. ஆனால், நேற்று டெல்லி போக முடியவில்லை. சென்னையிலேயே ஜெயின் சமூகத்தினர் நடத்திய மகாவீர் ஜெயந்தியில் கலந்துகொண்டார்.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வெள்ளி 30 மா 2018