மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

லேகியம் சாப்பிட்டதால் இளைஞர் உயிரிழப்பு?

லேகியம் சாப்பிட்டதால் இளைஞர் உயிரிழப்பு?

சென்னையில் உடல் எடையைக் குறைப்பதற்காக லேகியம் சாப்பிட்ட இளைஞருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயல் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். 28 வயதான பிரதீப் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவருக்கு இளம்வயதிலேயே உடல் பருமனாகி, சுமார் 100 கிலோ எடை இருந்தது. இதன் காரணமாக பிரதீப் உடல் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சிகள் செய்துள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த அளவு எடை குறையாததால் வருத்தத்தில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரதீப்பின் குடியிருப்பு பகுதியில் சாலையோரமாக ஒருவர் கடை அமைத்துப் பல்வேறு வியாதிகளுக்கு லேகியம் விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரதீப் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பிரதீப்பிடம் அந்த லேகிய கடைக்காரர், “உங்களது உடல் எடையைக் குறைக்க என்னிடம் ஸ்பெஷல் லேகியம் இருக்கிறது, அதைச் சாப்பிட்டால் உடல் எடை குறைந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.

இதை நம்பிய பிரதீப் முறையான மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவரின் பரிந்துரையின்றி அவரிடமிருந்து லேகியம் வாங்கி நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட பிரதீப் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிரதீப் நேற்று (மார்ச் 29) உயிரிழந்தார்.

லேகியம் சாப்பிட்ட பின்னரே பிரதீப்பின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மருத்துவர்கள், பிரதீப்பின் உடலைப் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை அளித்த பிறகே அவரது மரணத்துக்கான முழு விவரம் தெரியவரும்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

வெள்ளி 30 மா 2018