மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

தினம் ஒரு சிந்தனை: செயல்!

தினம் ஒரு சிந்தனை: செயல்!

செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும்.

- நெல்சன் மண்டேலா (18 ஜூலை 1918 – 5 டிசம்பர் 2013). தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர். நிறவெறிக்கு எதிராகப் போராடியவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக 27 ஆண்டுகள் சிறையில் வாடினார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். மேலும், இந்தியாவின் பாரத ரத்னா மற்றும் நேரு சமாதான விருது உட்பட, உலக நாடுகளின் 250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார். இந்தியர் அல்லாத ஒருவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்றால் அது நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே. அவர் பிறந்த நாளான ஜூலை 18ஆம் தேதியைச் சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐநா அறிவித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் சர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் அருகில் நெல்சன் மண்டேலாவின் ஒரு வெண்கல சிற்பம் வைக்கப்பட்டது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon