மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

ஒரு வருடத்துக்குப்பின் மேடையேறும் சசிகலா?

ஒரு வருடத்துக்குப்பின் மேடையேறும் சசிகலா?

காலஞ்சென்ற முனைவர் ம.நடராஜனின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (மார்ச் 30) காலை தஞ்சாவூர் தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. கடந்த வருடம் பிப்ரவரி 15ஆம் தேதி கூவத்தூரில் இருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்ற சசிகலா, அதன்பிறகு இன்று முதன்முதலாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என்றால் அது நடராஜனின் படத்திறப்பு நிகழ்ச்சிதான். அதனால், சசிகலாவைப் பார்ப்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடராஜன் படத்தை மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்னு திறந்து வைக்கிறார். நினைவு மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிடுகிறார். தமிழகத்தின் அநேக கட்சித் தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

இது ஒரு துக்க நிகழ்ச்சி என்பதாலும், இறுதிச் சடங்கினை ஒட்டிய நிகழ்ச்சி என்பதாலும் பரோல் நிபந்தனைகளின்படி சசிகலா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கத் தடையில்லை என்கிறார்கள். அதே நேரம் சசிகலாவைப் பார்க்க கூட்டம் வரும் என்பதால் நேற்று இரவு வரை இது தொடர்பான ஆலோசனையில் தினகரன் ஈடுபட்டிருந்தார்.

ஏற்கெனவே சசிகலாவின் உத்தரவுப்படி அமமுக மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்புகொண்ட தினகரன், “யாரும் கூட்டம் கூட்டிக்கிட்டு வந்துடாதீங்க. தஞ்சை சுற்று வட்டாரத் தொண்டர்கள் மட்டும் வந்தா போதும். மத்த மாவட்டங்கள்லேர்ந்து நிர்வாகிகள் மட்டும் வாங்க. அதுவும் காலையில வந்தா போதும்” என்று சொல்லியிருக்கிறார். எனவே, சென்னை நிர்வாகிகள் கூட இன்று அதிகாலையில் காரில் புறப்பட்டு தஞ்சை செல்கின்றனர்.

இன்று நடக்கும் படத்திறப்பு நிகழ்ச்சியில் சசிகலா மேடையில் ஏறலாமா அல்லது முதல் வரிசையில் அமர்ந்திருக்கலாமா என்றும் வழக்கறிஞர்கள் நேற்று ஆலோசித்துள்ளனர். மேடையில் நடராஜன் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு சசிகலா இறங்கி, சென்றுவிடலாம் என்றும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நிகழ்ச்சி முடியும் வரை மண்டபத்தில் சசிகலா இருக்க வேண்டும் என்று தினகரன் கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

அமமுக வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, “நடராஜன் படத்திறப்பு நிகழ்ச்சியில் துளியும் அரசியல் இல்லை என்றபோதும், இந்த நிகழ்ச்சி அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கப் போவதில்லை. சசிகலா என்ற பெண்ணின் துயரத்தில் பங்கேற்க நாங்கள் இருக்கிறோம் என்பதைச் சொல்லும் கூட்டம்தான் இது. பல அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டவுடன் சம்மதித்தார்கள். தேதிகளை மாற்றியதால் வைகோ இதில் கலந்துகொள்ள முடியவில்லை. மாநில, மத்திய அரசுகளின் நெருக்கடியை மீறி பல தலைவர்கள் கலந்துகொள்ள சம்மதித்ததே பெரிய விஷயம்தான். நேற்று இரவு வரை சில தலைவர்களுக்கு, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று நெருக்கடி தரப்பட்டிருக்கிறது.

இந்தத் தார்மிக பலத்தை சசிகலா எதிர்காலத்தில் தனது அரசியல் பலமாக மாற்ற வேண்டும். இது தொடர்பாகத்தான் கடந்த ஒன்பது நாள்களும் தஞ்சை வீட்டில் சசிகலா ஆலோசனை செய்திருக்கிறார். ஆக, நடராஜன் படத்திறப்பு நிகழ்ச்சி என்பது தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கும்” என்கின்றனர்.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வெள்ளி 30 மா 2018