மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

விஜய்யுடன் இணையும் ஜி.வி

விஜய்யுடன் இணையும் ஜி.வி

நாச்சியார் படத்தின் மூலம் மிகுந்த கவனிப்பைப் பெற்ற ஜி.வி.பிரகாஷ், தற்போது இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறியப்பட்ட ஜி.வி.பிரகாஷ், இசையிலிருந்து நடிப்புக்கு வந்த பிறகு இளைஞர்கள் மத்தியில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். சமீபத்தில் பாலாவின் இயக்கத்தில் வெளியான அவரது நடிப்பு திரைப் பிரபலங்களிடம் பாராட்டைப் பெற்றது. அது மட்டுமல்லாது தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களைக் கையில் வைத்திருக்கும் நடிகராக வலம்வருகிறார். நாச்சியார் படத்துக்குப் பிறகு அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஏ.எல்.விஜய்யின் படங்களுக்கு இசையமைத்து வந்த ஜி.வி.பிரகாஷ் தற்போது அவர் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து உறுதியான தகவல் இன்னும் வெளியாகாத நிலையில் இதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வெள்ளி 30 மா 2018