மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

பங்கு விற்பனையில் 1 லட்சம் கோடி வசூல்!

பங்கு விற்பனையில் 1 லட்சம் கோடி வசூல்!

நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி வசூலித்துள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மார்ச் 28ஆம் தேதி மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பங்கு விற்பனை வருவாய் குறித்த விவரங்களைப் பதிவிட்டுள்ளார். அதில், “நடப்பு 2017-18 நிதியாண்டில் அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக மத்திய அரசுக்குக் கிடைத்துள்ள வருவாய் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. சென்ற நிதியாண்டில் இந்த வருவாய் ரூ.46,250 கோடியாக மட்டுமே இருந்தது” என்று பதிவிட்டுள்ளார். நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக மொத்தம் ரூ.72,500 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அந்த இலக்கு ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

5 நிமிட வாசிப்பு

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

பிரசித்தி பெற்ற கோயில்கள் மூடல்!

3 நிமிட வாசிப்பு

பிரசித்தி பெற்ற கோயில்கள்  மூடல்!

வெள்ளி 30 மா 2018