மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020

ஜாக்குலினைப் பின்பற்றும் யாமி

ஜாக்குலினைப் பின்பற்றும் யாமி

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸைத் தொடர்ந்து யாமி கெளதமும் 'போல்' நடனத்தைக் கற்றுவருகிறார்.

தமிழில் கெளரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் யாமி கெளதம். தமிழ் தவிர கன்னடம், பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றியுள்ளார்.

இந்நிலையில், உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்று எண்ணிய யாமி கெளதம், போல் நடனப் பயிற்சியை மேற்கொள்கிறார். இதற்காக பிரபல போல் டான்ஸ் பயிற்சியாளர் ஆரிஃபா பிஹிந்தர்வாலா என்பவரிடம் பயிற்சி பெற்றுவருகிறார்.

இது குறித்துக் கூறும் யாமி கெளதம் , "என் உடலமைப்பு மீது எனக்கு இருந்த காதல்தான் போல் டான்ஸ் கற்கத் தூண்டியது. தற்போது இதை ஆர்வமாகச் செய்துவருகிறேன். இதன் மூலம் நடனம் ஆடுவது மட்டுமில்லாமல் நம் ஃபிட்னஸையும் பேணிக் காத்துக்கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், போல் நடனத்தைச் சிறப்பாகக் கற்றுக்கொண்டு அது தொடர்பான வீடியோக்களையும் அவ்வப்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுவந்தார். தொடர்ந்து புதிய இந்திப் படம் ஒன்றிலும் போல் நடனம் ஆடி அசத்தினார். இவரைத் தொடர்ந்து தற்போது யாமி கெளதமும் போல் நடனம் கற்றுவருகிறார்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon