மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

யுவன் - சந்தோஷ் நாராயணன்: சோதனை முயற்சி!

யுவன் - சந்தோஷ் நாராயணன்: சோதனை முயற்சி!

தமிழ்த் திரையுலகில் குறுகிய காலத்தில் ரசிக்கத்தக்க பல பாடல்களைக் கொடுத்து கவனம் ஈர்த்த இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். இவர் மற்றொரு முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவோடு இணைந்து இசையமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘பேய்பசி’. ஸ்ரீநிவாஸ் கவிநயம் இப்படத்தை இயக்கிவருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் அம்ரிதா, டேனியல் பாலாஜி, கருணாகரன் ஆகியோர் நடிக்கின்றனர். டோனி சான் ஒளிப்பதிவு செய்துவரும் இதற்கு மோகன் முருகதாஸ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஹாரர் ஜானரில் உருவாகிவரும் இப்படத்தை ‘ரைஸ்ஈஸ்ட் கிரியேஷன்ஸ் – மெர்லோம் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகின்றன. இப்படத்தில் பாடல்கள் இல்லை என்றும் யுவன் ஷங்கர் ராஜா – சந்தோஷ் நாராயணன் இருவரும் இணைந்து பின்னணி இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின் பின்னணி இசையமைக்கும் பணி துவங்கப்படவுள்ளது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon