மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 ஜன 2021

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவர் பலி!

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவர் பலி!

விருதுநகர் அருகே செயல்பட்டுவரும் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சிவகாசி மற்றும் விருதுநகர் பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரத்துக்குப் பட்டாசுத் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பட்டாசுத் தொழிலேயே நம்பியிருக்கின்றனர். பட்டாசு உற்பத்தி தொடர்பாக பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன. அதுபோன்று, பல ஒழுங்கு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் தொடர்கதையாகிவருகின்றன. இதனால் உயிர் பலிகளும் அதிகரித்துவருகின்றன.

இந்நிலையில் இன்று (மார்ச் 30) காலை விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு உற்பத்தி ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

அப்போது அங்கு வெடி மருந்துகள் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் முருகன், சந்திரன் ஆகிய இருவரும் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்களும் காவல் துறையினரும் விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

சிவகாசி அருகே முதலிபட்டியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon