மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

ரொனால்டோவைத் தவிர்த்த ரியல் மாட்ரிட்?

ரொனால்டோவைத் தவிர்த்த ரியல் மாட்ரிட்?

ரியல் மாட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ நாளை (மார்ச் 31) நடைபெறவிருக்கும் லா லீகா போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லா லீகா தொடரில் லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அதனால் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெற அணிகளுக்கிடையே கடும் போட்டி நடைபெற்றுவருகிறது. பார்சிலோனா அணி தொடர்ச்சியாகச் சிறப்பாக விளையாடி தோல்வியையே சந்திக்காமல் முதலிடத்தில் உள்ளது. அத்லேடிகோ மாட்ரிட் அணி 64 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்த தொடரில் முதல் பாதியில் சொதப்பிய ரியல் மாட்ரிட் அணி இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடி வெற்றிகளைத் தொடர்ச்சியாக குவித்து வருகிறது. முதல் பாதியில் கோல் அடிக்க முடியாமல் திணறிய ரொனால்டோ தற்போது சிறப்பாக விளையாடி கோல்களை அடித்துவருவதால், அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ரியல் மாட்ரிட் அணி இரண்டாவது இடத்தைப் பெற முயற்சி செய்துகொண்டிருக்கும் நிலையில் நாளை நடைபெறவிருக்கும் லீக் ஆட்டத்தில் ரொனால்டோவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரியல் மாட்ரிட் அணி நாளைய போட்டியில் லாஸ் பால்மாஸ் அணியை எதிர்கொள்கிறது.இந்தப் போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்றாலும், ஜுவான்டஸ் அணியுடன் புதன்கிழமை (ஏப்ரல் 4) நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதி அதைவிட முக்கியமான ஒன்று என்பதால் ரொனால்டோவிற்கு இந்தப் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

லாஸ் பால்மஸ் அணியுடன் நடைபெறவிருக்கும் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி எளிதில் வெற்றிபெறும் என்றே கணிப்புகள் தெரிவிப்பதால், அடுத்த முக்கியமான போட்டியைக் கருத்தில் கொண்டே ரொனால்டோவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது என ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

5 நிமிட வாசிப்பு

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

பிரசித்தி பெற்ற கோயில்கள் மூடல்!

3 நிமிட வாசிப்பு

பிரசித்தி பெற்ற கோயில்கள்  மூடல்!

வெள்ளி 30 மா 2018