மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020

பயணிகளுக்கு உதவும் ரோபோ!

பயணிகளுக்கு உதவும் ரோபோ!

பயணிகளுக்கு உதவும் வகையில் மனித உருவம் கொண்ட ரோபோ ஒன்று பெங்களூர் விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் மனித உருவம் கொண்ட `ஹியூமனாய்டு' ரோபோக்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான சோதனை முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை பெங்களூரில் நேற்று (மார்ச் 29) தொடங்கி வைத்துப் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ப்ரியங்க் கார்கே, "கெம்பா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை பெங்களூரைச் சேர்ந்த சிரேனா டெக்னாலஜி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வடிவமைத்துள்ளது. இது பயணிகளுக்கு தேவையான தகவல்களை அவர்களுக்கு விருப்பப்பட்ட மொழியில் தருகிறது. இது முழுக்க முழுக்க பெங்களூரில் தயார் செய்யப்பட்டது. இது போன்ற இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளை நாங்கள் அறிமுகம் செய்யவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கார்கே தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கெம்பா ரோபோ ஆங்கிலம் மற்றும் கன்னட மொழியில் உரையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலம் பற்றிய தகவல்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுதும் பல்வேறு தகவல்களையும், இந்த ரோபோ அளித்து வருகிறது. விமானத்தில் பயணம் செய்யவரும் பயணிகள் இந்த அதிசய ரோபோவை பார்த்து விட்டு செல்கின்றனர்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon