மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

எச்.ராஜா ஒரு துரோகி: ஜெயக்குமார்

எச்.ராஜா ஒரு துரோகி: ஜெயக்குமார்

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சாதகமாகப் பேசிய எச்.ராஜாவை துரோகி என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாகக் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றத்தினால் இதுநாள்வரை தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி நீரில் 14.75 டிஎம்சியைக் குறைத்து, 177.25 டிஎம்சியாக வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை 6 வாரத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

காலக்கெடு நிறைவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே இவ்விவகாரத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (மார்ச் 30) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை சிந்தாமல் சிதறாமல் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசைச் சேர்ந்தது.

இதுவரை யாரும் தராத அளவுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்தோம். எம்பிக்கள் நாடாளுமன்றத்தை 18 நாட்கள் முடக்கினர். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மிகுந்த அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழக அரசு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டமும் நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

எனவே, உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளோம். மேல்முறையீடு வழக்கா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கா என்பது தொடர்பாக அரசு ஆலோசித்துவருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விடப்போவதில்லை.

எதிர்க்கட்சிகளின் நன்மதிப்புக்காக நாங்கள் கட்சியை நடத்தவில்லை. மக்களின் நன்மதிப்பே எங்களுக்கு அவசியம். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் பங்கீட்டுக் குழு அமைப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பதுதான் தமிழகத்துக்கு நல்லது. குற்றம், குறை காண்பதற்கான நேரம் இதுவல்ல” என்று அவர் குறிப்பிட்டார்.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வெள்ளி 30 மா 2018