ரயில்வேயில் அதிகரிக்கும் காலியிடங்கள்!

இந்திய ரயில்வேயில் கூடுதலாக 20,000 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் 90,000இல் இருந்து 1,10,000 ஆக அதிகரித்துள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் சிறப்புப் பாதுகாப்புப் படையில் 9,000 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரம் மே மாதம் வெளியிடப்படும். மேலும் எல்1 ,எல்2 பிரிவுகளில் 10,000 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 20,000 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயணப் பாதுகாப்பை மேம்படுத்துதல், தடையை நீக்குதல், மின்சாரமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் போன்றவற்றை ஏற்படுத்தும் வகையில் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் இந்த முடிவை எடுத்துள்ளார்.