மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020

கரிம உணவு ஏற்றுமதி அதிகரிப்பு!

கரிம உணவு ஏற்றுமதி அதிகரிப்பு!

2016-17 நிதியாண்டில் இந்தியாவின் கரிம வேளாண் உணவு ஏற்றுமதி 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

2015-16 நிதியாண்டில் கரிம வேளாண் உணவுகள் ரூ.19.76 பில்லியன் மதிப்புக்கு ஏற்றுமதியாகியிருந்த நிலையில்,2016-17 நிதியாண்டில் அது 25 சதவிகித உயர்வுடன் ரூ.24.78 பில்லியனாக அதிகரித்துள்ளது. அதேநேரம் மேற்கூறிய காலகட்டத்தில் ஒட்டுமொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ரூ.1,074 பில்லியனிலிருந்து ரூ.1,084 பில்லியனாக அதிகரித்திருந்தது. ஒட்டுமொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் கரிம உணவுகள் 3 சதவிகிதப் பங்களிப்பை மட்டுமே கொண்டிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதியில் கணிசமான வளர்ச்சியைக் கொண்டிருக்கின்றன. அதாவது கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் கரிம உணவுகள் ஏற்றுமதி ரூ.5 பில்லியனிலிருந்து ரூ.25 பில்லியனாக அதிகரித்துள்ளது.

கரிம வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் சோயாபீன் மற்றும் கச்சா பருத்தி இணைந்து 50 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன. மேலும், தேயிலை, பருப்பு வகைகள் மற்றும் கம்பு ஆகியவையும் கணிசமான அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் கரிம வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் முக்கியச் சந்தைகளாகத் திகழ்கின்றன. கரிம வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி அதிகரித்து வந்தாலும், அவற்றுக்கான தரச் சான்று பெறுவதில் இத்துறை சற்று சிரமத்தைச் சந்தித்து வருவதாக குர்கான் நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் கரிம வேளாண் உற்பத்தி நிறுவனமான ஆர்கானிக்கின் துணை நிறுவனர் பங்கஜ் அகர்வால் பிசினஸ் ஸ்டேண்டர்டு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon