மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020

ஜெட் வேகத்தில் உயரும் வாகனக் காப்பீடு!

ஜெட் வேகத்தில் உயரும் வாகனக் காப்பீடு!

நாடு முழுவதும் இயங்கும் லாரி, டூவீலர் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்திய இன்ஷ்யூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாரி, டூவீலர், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதையறிந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் காப்பீட்டுக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என ஒழுங்குமுறை ஆணையத்திற்குக் கோரிக்கை விடுத்தன. எனினும், ஒழுங்குமுறை ஆணையம் லாரி, டூவீலர் உள்ளிட்ட வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்குவருகிறது.

அதே போல் பயணிகள் சவாரி ஆட்டோக்களுக்கும் 17 சதவிகிதம்வரை காப்பீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon