மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

காவிரி: அதிமுக உண்ணாவிரத அறிவிப்பு!

காவிரி: அதிமுக உண்ணாவிரத அறிவிப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரும் ஏப்ரல் 2ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் நம்பிக்கைத் தெரிவித்து வந்தனர். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எவ்வித அறிவிப்பையோ அல்லது பணிகளையோ மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் சட்ட நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இதற்காக 3 அதிமுக எம்.பி.க்கள் வரை ராஜினாமா செய்யத் தயார் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் காவிரி விவகாரம் குறித்துப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரும் ஏப்ரல் 2ஆம் தேதி அதிமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அறப்போராக சட்டம்-ஒழுங்கு சீர்கெடாத வகையில் காலை 9மணி முதல் மாலை 5மணி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று கூறிய அவர், தமிழகத்தின் உரிமைகளை அதிமுக ஒருபோதும் விட்டுக் கொடுக்காது" என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வை உண்ணா விரதத்தில் வெளிப்படுத்துவோம் என்று குறிப்பிட்டார். புதிய கட்சிகள் தொடங்குவது குறித்து, தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதால் வெளி மாநிலங்களில் வேண்டுமானால் அவர்கள் கட்சி தொடங்கிக் கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வெள்ளி 30 மா 2018