மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020

பாலிவுட் ரீமேக்கில் நயன்தாரா

பாலிவுட் ரீமேக்கில் நயன்தாரா

அரை டஜன் படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நயன்தாரா மற்றொரு இந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாடல் காட்சிகளில் தோன்றி நடனம் ஆடவும் காதல் காட்சிகளில் நடிக்கவுமே பயன்படுத்தப்பட்டுவந்த கதாநாயகிகளை கதையின் நாயகிகளாக்கி சில படங்கள் உருவாகிவருகின்றன.

அனுஷ்கா சர்மா நடிப்பில் பாலிவுட்டில் மார்ச் 2ஆம் தேதி வெளியான பரி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ரஷ்யாவில் வெளியாகவுள்ளது. ஒரு பெண்ணை மையப்படுத்தி உருவான இந்தியப் படம் ரஷ்ய மொழியில் வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் தமிழ் ரீமேக்கில் அனுஷ்கா சர்மா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நயன்தாரா இந்த ஜானரில் நடித்த மாயா, டோரா படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றன. சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்துவரும் நயன்தாரா இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதால் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon