மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

அனைத்துக் கட்சிக் கூட்டம்: திமுக செயற்குழு முடிவு!

அனைத்துக் கட்சிக் கூட்டம்: திமுக செயற்குழு முடிவு!

காவிரி விவகாரத்திற்காக வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்று திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படவிலை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 30) திமுக அவசர தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோரும் 65 மாவட்டங்களின் செயலாளர்கள், அணி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 517 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு அழுத்தம் கொடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் நிர்வாகிகள் பேசினார். மேலும் இதுதொடர்பாக பெரிய அளவிலான போராட்டம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கூட்டத்தின் முடிவில் "காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டிப்பது, காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும், கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்தாத கூட்டுறவு ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு கண்டனம், கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்வது, நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகத் தேசிய சுற்றுச்சூழல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்வது, மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டைப் புறக்கணிக்கும் செயலுக்குக் கண்டனம் உள்ளிட்ட 7தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மேலும் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி காலை 10மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தவும் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட உள்ளது.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

வெள்ளி 30 மா 2018