மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

புனித வெள்ளியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்திவருகின்றனர்.

இயேசு கிறிஸ்த்து சிலுவையில் அறையப்பட்டு அனுபவித்த துன்பங்களையும் அவருடைய மரணத்தையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. கிறிஸ்த்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு கிறிஸ்த்து உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும். பிப்ரவரி 14ஆம் தேதி சாம்பல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அன்று முதல் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு அனுசரித்துவருகிறார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களில் நீண்ட நேரம் திருப்பலி, ஆராதனைகள் நடைபெறும்.

கிறிஸ்தவர்கள் இன்று முழு நோன்பு இருந்து சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். சென்னை சாந்தோம், பெரம்பூர், பெசன்ட்நகர், எழும்பூர் கதிட்ரல் சாலை, ராயப்பேட்டை வெஸ்லி உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து 3ஆம் நாள் உயிர்த்தெழுவதை ஈஸ்டர் தினமாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். அதன்படி, இந்த ஆண்டு, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி ஞாயிறுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்தவர்களுக்குப் புனித வெள்ளியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். புனித வெள்ளியான இன்று இயேசு பிரானின் தைரியம் மற்றும் கருணையை நினைவுகூர்வோம். அவர் தன் வாழ்க்கையை மக்களுக்காகவும் அதர்மத்தை ஒழிக்கவும் சமுதாயத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் அர்ப்பணித்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் இயேசு கிறிஸ்துவின் சிற்பத்தை வடிவமைத்துப் புனித வெள்ளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

வெள்ளி 30 மா 2018