மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 ஜன 2021

நடராஜன் படத்திறப்பு: தவிர்த்த சசிகலா

நடராஜன் படத்திறப்பு: தவிர்த்த சசிகலா

மறைந்த ம.நடராஜனின் படத்திறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 30) தஞ்சையில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கு பழ.நெடுமாறன் தலைமை ஏற்றார். நல்லக்கண்ணு படத்தைத் திறந்து வைத்தார். மலரை கி.வீரமணி வெளியிட திவாகரன் பெற்றுக் கொண்டார்.

தா.பாண்டியன், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, திருமாவளவன், தமிமுன் அன்சாரி, சீமான், விவசாய சங்கப் பிரமுகர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வரவேற்புரையாற்றிய டிடிவி தினகரன், ’’நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா சார்பாகவும், எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சின்னம்மாவுக்கு 19 வயது நடந்துகொண்டிருக்கும்போது அவருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்துவந்தது. அப்போது என் தந்தையாரும், மாமா டாக்டர் வினோதகனும் பல வரன்களைப் பார்த்து கடைசியில் சித்தாப்பா (நடராஜனை) மிகவும் பிடித்துப்போய் அவர் வீட்டுக்குப் போய் அவரது ஜாதகம் கேட்டார்கள். ஆனால் அவருக்கு ஜாதகம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனாலும் அவருக்குத்தான் முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். எங்கள் குடும்பத்தில் ஜாதகம் பார்க்காமல் அதற்கு முன்னும் திருமணம் நடந்ததில்லை, பின்னும் நடந்ததில்லை’’ என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் சசிகலா கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் வழக்கறிஞர்களுடனான தொடர் ஆலோசனைக்குப் பிறகு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தார் சசிகலா. கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சசிகலா கலந்துகொள்வதால் சிறை நன்னடத்தை பற்றிய குறிப்புகளில் பின்னடைவு ஏற்படலாம் என்று வழக்கறிஞர்கள் சொல்லியதை அடுத்து நிகழ்ச்சிக்கு வருவதைத் தவிர்த்துவிட்டார் சசிகலா.

நிகழ்ச்சியில் பேசிய பலரும் நடராஜனை மட்டுமின்றி சசிகலாவையும் வானளாவப் புகழ்ந்தார்கள்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon