மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020

அர்ஜுன் ரெட்டி ஹீரோவுடன் ஜஸ்டின் பிரபாகரன்

அர்ஜுன் ரெட்டி ஹீரோவுடன் ஜஸ்டின் பிரபாகரன்

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் மூலம் தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். தொடர்ந்து, ஒருநாள் கூத்து, ராஜா மந்திரி, ஆரஞ்சு மிட்டாய், தொண்டன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மெலோடியான பாடல்கள் மூலம் குறுகிய காலத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்த இவர் பின்னணி இசையிலும் திறமையானவர் . இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ள ஜஸ்டின் பிரபாகரன், "நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா. அவருக்கு இளம் ரசிகர்கள் இடையே இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம்.இந்தப் படத்தின் இயக்குநர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே "மரோ பிரபஞ்சம்" ,என்ற குறும்படத்தில் பணியாற்றினோம். இப்போது இந்தப் படத்துக்கான கம்போசிங் நடந்து வருகிறது. விரைவில் தலைப்பு பற்றிய முறையான தகவல் வரும்" என்று கூறியுள்ளார்.

"தமிழில் சசிகுமார் நடிக்கும் நாடோடிகள் 2 , அதர்வா நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த, எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் இடப்படாத ஒரு புதிய படம் என்று படங்கள் இருக்கின்றன. மலையாளத்தில் ஏற்கனவே அறிமுகம் ஆகிவிட்டேன். தற்போது தெலுங்கிலும் அறிமுகமாவது எனக்கு மிகுந்த பெருமை. இசைக்கு எப்படி மொழி, பிராந்தியம் அநாவசியமோ , இசைக் கலைஞனுக்கும் அப்படியே. காற்றின் தேசம் எங்கும் செல்லும் கானமே ஒரு இசைக் கலைஞனின் உயிர் மூச்சு" என்று பூரிப்புடன் தெரிவித்துள்ளார் ஜஸ்டின் பிரபாகரன்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon