மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

கோபத்தில் ரிச்சா சதா

கோபத்தில் ரிச்சா சதா

நடிகை சில்க் ஸ்மிதாவுடன் ஷகிலாவை ஏன் ஒப்பிட்டுப் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் இந்தி நடிகை ரிச்சா சதா.

மலையாள சினிமாவில் 16 வயதில் அறிமுகமானவர் ஷகிலா. தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் விரைவிலேயே பிரபலம் அடைந்தார். இந்தியா முழுவதிலும் தெரியப்பட்ட நடிகையாக இருந்தாலும், கடந்த 10 வருடங்களில் எந்தவொரு திரைப்படத்திலும் அதிக நிமிடங்கள் ஷகிலா நடித்ததில்லை. தற்போது அவரது வாழ்க்கை வரலாறு இந்தியில் சினிமாவாகிறது. சமீபத்தில் அவர் மலையாளத்தில் வெளியிட்ட சுயசரிதை புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம் உருவாவதாகத் தெரிகிறது. இதில் இந்தி நடிகை ரிச்சா சதா ஷகிலாவாக நடிக்கிறார்.

இது பற்றி ரிச்சா சதா கூறும்போது, "இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்றதும் என்னையும் வித்யா பாலனையும் ஒப்பிட்டுப் பேசத் தொடங்கிவிட்டனர். அவருடன் என்னை ஒப்பிடுவது பற்றி எனக்கு ஒன்றும் இல்லை. வித்யா பாலன், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்திருந்தார். அதை வைத்து இப்படியான ஒப்பிடல் நடக்கிறது. இது எனக்கு நல்லதுதான். ஆனால் அவர் நடித்தது சில்க் ஸ்மிதா கேரக்டர், நான் நடிப்பது ஷகிலா கேரக்டர். ஏன் இருவரையும் ஒப்பிட வேண்டும்?” என்று கேட்டுள்ளார்.

இப்படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். படத்துக்காக உடல் எடையை அதிகரிக்க இருக்கிறார் ரிச்சா. மலையாள ஆசிரியர் ஒருவரிடம் மலையாள மொழியையும் கற்றுவருகிறார். வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon