மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

கன்னட மக்கள் தவறு செய்ய மாட்டார்கள்: அமித் ஷா

கன்னட மக்கள் தவறு செய்ய மாட்டார்கள்: அமித் ஷா

தான் தவறு செய்தாலும், கன்னட மக்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கடந்த மே 27ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து, அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தற்போது பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். மைசூரில் இன்று பிரச்சாரம் செய்த அவர், “கர்நாடகா ஊழல் விவகாரத்தில் சித்தாராமையாவுக்கு பதில் எடியூரப்பா பெயரை வாய் தவறிக் கூறிவிட்டேன். நான் வாய் தவறிப் பேசியதால் காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர். நான் தவறு செய்யலாம், ஆனால் கர்நாடக மக்கள் தவறு செய்யமாட்டார்கள். அவர்கள் சித்தராமையாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, சமீபத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக தொண்டர் ராஜுவின் இல்லத்துக்குச் சென்ற அமித் ஷா, ராஜுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, “ சித்தராமையா ஆட்சியில் `சட்டம் ஒழுங்கு முழுவதும் சீரழிந்துவிட்டது. பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்றவை அதிகரித்துள்ளன. எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்ததும் ராஜு கொலையாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்னிறுத்தப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வெள்ளி 30 மா 2018