மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

டெல்லி செல்லும் தமிழக அதிகாரிகள்!

டெல்லி செல்லும் தமிழக அதிகாரிகள்!

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில், தமிழக உயர் அதிகாரிகள் குழு இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வளாகத்திலும் அவை நடந்த 17நாட்களாக அதிமுக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிகூட சாய்க்கவில்லை. பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்கிற அனைத்துக் கட்சித் தீர்மானத்திற்கும், மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்கிற சட்டமன்ற சிறப்புத் தீர்மானம் குறித்தும் இதுவரை மத்திய அரசு எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக கண்டிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று முதல்வரும், அமைச்சர்களும் நம்பிக்கைத் தெரிவித்து வந்தனர். நேற்றுடன் அவர்களுடைய நம்பிக்கைப் பொய்த்த நிலையில், இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணி ஆகியோர் இன்று (மார்ச் 30) மாலை விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

வெள்ளி 30 மா 2018