மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

தொலைத் தொடர்புத் துறை விரைவில் மேம்படும்!

தொலைத் தொடர்புத் துறை விரைவில் மேம்படும்!

வருவாய் இழப்பில் மூழ்கிக்கொண்டிருக்கும் இந்தியத் தொலைத் தொடர்புத் துறை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் சமீப காலமாகவே கடுமையான போட்டி நிலவிவருகிறது. கட்டணக் குறைப்பை மேற்கொண்டு வாடிக்கையாளரைக் கவரும் முயற்சியில் வருவாய் இழப்பு இன்னும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2017ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களின் நிகர வருவாய் 8.1 சதவிகிதச் சரிவுடன் ரூ.610 பில்லியனாகக் குறைந்துள்ளது. இதற்கு முந்தைய 2016ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் நிகர வருவாய் ரூ.665 பில்லியனாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சரிவில் சென்று கொண்டிருக்கும் தொலைத் தொடர்புத் துறை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

5 நிமிட வாசிப்பு

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

பிரசித்தி பெற்ற கோயில்கள் மூடல்!

3 நிமிட வாசிப்பு

பிரசித்தி பெற்ற கோயில்கள்  மூடல்!

வெள்ளி 30 மா 2018