மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

காமன்வெல்த்தில் பி.வி.சிந்து?

காமன்வெல்த்தில்  பி.வி.சிந்து?

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவரான பி.வி.சிந்துவுக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 27) பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த (ஏப்ரல்) மாதம் 4ஆம் நாள் தொடங்கவிருக்கும் காமன்வெல்த் தொடரில் பங்கேற்பது சந்தேகம் தான் என ஒரு அச்சம் நிலவியது. காயமடைந்த பி.வி.சிந்துவிற்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனைகளான சாய்னா நேவால், சிந்து இருவரும் இந்த முறை காமன்வெல்த் தொடரில் சிறப்பாக விளையாடி பதக்கம் வெல்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஹதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது கடந்த செவ்வாய்க்கிழமை சிந்துவுக்குக் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் ரசிகர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் பி.வி.சிந்துவின் தந்தை பி.வி.ரமணா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அதில் “பயிற்சியின் போது சிந்துவுக்குக் காயம் ஏற்பட்டது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுவருகிறது. எலும்பு முறிவு போன்ற எந்த சிக்கலும் இல்லை. இன்னும் இரண்டு நாட்களுக்கு சிந்து ஓய்வில் இருப்பார். அதன் பின்னர் மீண்டும் பயிற்சியைத் தொடங்குவார். காமன்வெல்த் விளையாடுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

உலகின் பேட்மிண்டன் வீராங்கனைகளில் மூன்றாவது இடத்தில் உள்ள சிந்து ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் வெண்கலப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

வெள்ளி 30 மா 2018