மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020

தாஜ்மஹால்: பார்வையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

தாஜ்மஹால்: பார்வையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கப் பார்வையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹாலைக் காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்க்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஞாயிறு (ஏப்ரல் 1) முதல் சுற்றுலாப் பயணிகள் அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே தாஜ்மகால் வளாகத்துக்குள் இருக்க முடியும். அதற்கு மேல் இருப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. கூட்ட நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகிவருவதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 15 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு தாஜ்மஹாலைக் காண டிக்கெட் கட்டணம் வசூலிப்பதில்லை. இது இல்லாமல் வாரக் கடைசிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் எண்ணிக்கை பதிவாகிறது. சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் நீண்ட நேரம் தாஜ்மஹால் வளாகத்திலேயே இருப்பதால் கூட்ட நெரிசல் அதிகரிப்பதாகத் தெரிகிறது. அதைத் தவிர்த்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் சிரமமின்றி தாஜ்மஹாலைக் கண்டுகளிக்கும் நோக்கில் இந்த நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகத் தொல்லியல் ஆய்வுத் துறை விளக்கமளித்துள்ளது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon