மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020

ஆதார் மோசடி: புகார் அளித்த நடிகை!

ஆதார் மோசடி: புகார் அளித்த  நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை மற்றும் மாடல் அழகியான ஊர்வசியின் ஆதார் எண்ணை வைத்து மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர்.

ஆதார் அட்டை மோசடியில் பொதுமக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அவதிப்படுகின்றனர். தற்போது இந்தியா முழுவதும் அனைத்துத் துறைகளிலும் ஆதார் கட்டாயமாகிவிட்டது. அதனால் உண்மையான ஆதாரைப் போன்று போலியான ஆதாரைத் தயார் செய்து அதனைப் பல்வேறு காரணங்களுக்கு உபயோகப்படுத்தி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரியூட்டலாவின் போலியான ஆதாரை வைத்து ஹோட்டல் ரூம் புக்கிங் செய்யபட்டுள்ளது. இந்தச் செய்தியறிந்து நடிகை ஊர்வசி தனது உதவியாளர் செய்திருக்கலாம் என்று அவரிடம் விசாரித்தார். ஆனால் அவர் நான் எந்த புக்கிங்கும் செய்யவில்லை என மறுக்கவே உத்திர பிரதேசத்தில் உள்ள பந்தாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.காவல் துறையினர் இந்தப் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பாலிவுட் நடிகையான ஊர்வசி 2015ஆம் ஆண்டில் மாடல் அழகிக்கான மிஸ் திவா பட்டத்தை வென்றுள்ளார். இவர் தற்போது வரை இந்தி, கன்னட மற்றும் பெங்காலி மொழிகளில் 7 படங்களில் நடித்துள்ளார். இவருடைய 'ஹெட் ஸ்டோரி 4' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் தற்போது சல்மான் நடிப்பில் உருவாகிவரும் 'ரேஸ் 3' படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon