மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

டிஜிட்டல் திண்ணை: பன்னீர் கொடுத்த ஐடியா... கை தட்டிய எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை:  பன்னீர் கொடுத்த ஐடியா... கை தட்டிய எடப்பாடி

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

“கெடு விதிக்கப்பட்ட நாளும் முடிந்துவிட்டது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் இன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் ஏற்பாட்டில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 120 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் மதுரை பாண்டி கோயில் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருமண நிகழ்ச்சி என்பதால் அதை கேன்சல் செய்யாமல் எடப்பாடி, பன்னீர் இருவருமே கிளம்பிப் போனார்கள். நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கும் சூழ்நிலையில் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என ஆலோசனை கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தாலும், அந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விபரங்கள் வெளிவரவில்லை. கூட்டம் முடிந்த பிறகு, பன்னீரை இருக்கச் சொல்லியிருக்கிறார் முதல்வர்.

‘விவசாயிகள் எல்லோரும் கொந்தளிப்பாக இருக்காங்க. இந்த நேரத்தில் நாம இலவசத் திருமணங்களை நடத்தி வைக்கப் போனால் ஏற்கெனவே திட்டிட்டு இருக்காங்க, இப்போ இன்னும் சங்கடமா போயிடும். கல்யாணமாக இருக்கு... வேற நிகழ்ச்சியாக இருந்தாகூட கேன்சல் பண்ணிடலாம். இதை கேன்சல் பண்ணினால் அபசகுனமா நினைப்பாங்க. உதயகுமாரை வெச்சு கல்யாணத்தை நடத்திட சொல்லலாமா?’ என கேட்டாராம்.

அதற்கு பன்னீர், ‘நாம வரோம்னு ஊரெல்லாம் ஏற்பாடுகள் தடபுடலாக செஞ்சுட்டாங்க. இப்போ வரலைன்னு சொன்னால் அது கட்சிக்காரங்களுக்கும், கல்யாணம் பண்ணிக்கிற ஜோடிகளுக்கும் ஏமாற்றமாகிடும். காவிரி பிரச்னை இருந்தாலும் அதைவிட அவங்க இதைத்தான் பெருசா பார்ப்பாங்க. அதனால், நாம போய்த்தான் ஆகணும்’ என்று சொன்னாராம்.

‘போனால் நிச்சயமாக எல்லோருமே நம்மை திட்டுவாங்க. எப்படி சமாளிக்கிறதுன்னுதான் புரியலை...’ என எடப்பாடி வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார். சற்றும் யோசிக்காமல் பன்னீர் அந்த பதிலை சொன்னாராம். ‘நாளைக்கு கல்யாண வீட்டுல வெச்சே காவிரி மேலாண்மை வாரியத்துக்காக நாம உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவிச்சுடலாம். கல்யாணத்துல கலந்துகிட்ட மாதிரியும் ஆகிடும். உண்ணாவிரதம் அறிவிச்ச மாதிரியும் ஆகிடும். மீடியாவுலயும் சரி... வெளியிலயும் சரி... எல்லோரும் உண்ணாவிரதம் பற்றித்தான் பேசுவாங்க. கட்சிக்காரங்களும், கல்யாணக்காரங்களும் சமாதானம் ஆகிடுவாங்க...’ என்பதுதான் பன்னீர் சொன்ன பதில்.

அதைக் கேட்டதும் எடப்பாடி முகத்தில் அப்படியொரு சந்தோஷமாம். எழுந்து நின்று பன்னீருக்கு கைகொடுத்திருக்கிறார். ‘அருமையான ஐடியா. அதுக்கு ஒரு நாள் குறிச்சு கல்யாண மேடையில் அறிவிச்சுடலாம். மேடையில் அறிவிக்கும் வரை யாருக்கும் தெரிய வேண்டாம். நீங்க பேசும்போது நீங்களே அதை அறிவிச்சுடுங்க. ஏன்னா இது உங்க ஐடியா. நீங்க சொல்றதுதான் சரியாக இருக்கும்..’ என்று எடப்பாடி சொன்னாராம். அதன்படியே இன்று மேடையில் ஏப்ரல் 2ஆம் தேதி உண்ணாவிரதம் என அறிவிக்கும் வரை, மற்ற அமைச்சர்களுக்குகூட விவரம் தெரியாதாம்.

ஏப்ரல் 2ஆம் தேதி உண்ணாவிரதம் என்பதை மேடையில் அறிவித்துவிட்டு எடப்பாடியைத் திரும்பிப் பார்த்தார் பன்னீர். அவர், தலையாட்டியபடி கை தட்ட, ஒட்டுமொத்தக் கூட்டமும் கை தட்டியது”என்று முடிந்தது ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப்.

தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது.

”தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள நடராஜன் வீட்டில் தங்கியிருக்கும் சசிகலாவைப் பல்வேறு அரசியல் பிரலங்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். இன்று தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நடராஜன் படத்திறப்பு விழா நடந்தது. காலையில் வீட்டில் இருந்து எல்லோரும் கிளம்பியிருக்கிறார்கள். ஆனால் சசிகலா மட்டும் கிளம்பவில்லை. ‘எனக்கு அங்கே வர விருப்பம் இல்லை. ஆளாளுக்கு தேவையில்லாமல் அரசியல் பேசுவாங்க. அது பரோல் நிபந்தனைகளுக்கு சரியா வராது. நீங்க போய்ட்டு வாங்க... ‘ என சொல்லிவிட்டாராம். மேடைக்குக் கீழே கொஞ்ச நேரம் வந்து அமர்ந்து சென்றால்கூட, நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தெம்பாக இருக்கும் என்று தினகரன் எவ்வளவோ சொல்லியும் சசிகலா வரவே இல்லையாம். ஜெயா ப்ளஸில் மூத்த தலைவர்கள் நடராஜனைப் பற்றி புகழ்ந்ததைப் பார்த்துக் கண் கலங்கிவிட்டாராம்.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வெள்ளி 30 மா 2018