கன்னியாகுமரி: பூக்கள் விலை உயர்வு!

பங்குனி உத்திரம் மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ சந்தை உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பூக்கள் விற்பனைக்காகக் கொண்டுவரப்படுகின்றன. வெள்ளிக் கிழமை (மார்ச் 30) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவில்களில் வழிபாட்டுக்கான பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு முன்பு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான பிச்சி பூவின் விலை நேற்று ரூ.750 உயர்ந்து ரூ.1,150க்கு விற்பனையாகிறது.
மல்லிகைப்பூ விலை ரூ.900 ஆக உள்ளது. இதன் விலை நேற்றைய முன்தினம் ரூ.400 ஆக மட்டுமே இருந்தது. முல்லை பூவின் விலை 400 ரூபாயிலிருந்து 1,150 ரூபாயாக உயர்ந்துள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், வருகிற 1ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை வரவிருப்பதால் அன்றும் பூக்களுக்கான தேவை அதிகரித்து, அவற்றின் விலை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.