மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

ஹெச் 4 விசா வைத்திருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி!

ஹெச் 4 விசா வைத்திருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி!

அமெரிக்காவில் ஹெச் 4 விசா பெற்று பணியாற்ற முடியாமல் இருப்பவர்கள் ஹெச்-1B விசா பெற வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அமெரிக்க குடியமர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அந்த நாட்டில் குடியேறியிருக்கும் மற்றும் புதிதாகக் குடியேறும் வெளிநாட்டினருக்கு குடியமர்வு சட்ட விதிகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தார். அது மட்டுமின்றி (பை அமெரிக்கன் அண்ட் ஹைர் அமெரிக்கன்) `அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்காவைச் சேர்ந்தவர்களுக்கு பணியில் முன்னுரிமை வழங்குங்கள்' என்கிற கொள்கையையும் முன்வைத்தார். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஹெச்-1B விசா பெற்றவர்களைச் சார்ந்து ஹெச் 4 விசாவுடன் அமெரிக்காவில் குடியேறியவர்கள்தான். ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் ஹெச் 4 விசா உள்ளவர்கள் அங்கு பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தற்போது இதில் சில கட்டுப்பாடுகளைப் புகுத்தி ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஹெச்-1B விசாவை விண்ணப்பிக்கலாம் என அமெரிக்க குடியமர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஹெச்-1B விசா வழங்குவதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இத்திட்டத்தின் கீழ் புதிதாக 65,000 பேருக்கு மட்டுமே ஹெச்-1B விசா வழங்கப்படுகிறது. மேலும் அங்கு முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு (அமெரிக்காவில் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்) கூடுதலாக 20,000 ஹெச்-1B விசா வழங்கப்படுகிறது.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வெள்ளி 30 மா 2018