மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

தமிழ் சினிமா ஸ்டிரைக் யாருக்கானது? - விஷால் விளக்கம்!

தமிழ் சினிமா ஸ்டிரைக் யாருக்கானது? - விஷால் விளக்கம்!

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளனம்(ஃபெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகிய இருவரும் இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது தரப்பு நியாயத்தை விளக்கியுள்ளனர். ‘தயாரிப்பாளர்களின் நலனை மட்டுமே முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெறவில்லை. மக்களுக்காகவும் சேர்த்தே நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம்’ என்கின்றனர். அப்படி எந்த வகையில் மக்களுக்காக இவர்கள் போராடுகிறார்கள்?

தயாரிப்பாளர் சங்கத்துத் தரப்பு நியாயத்தை விஷால் விளக்கியது ஏற்கனவே மின்னம்பலத்தில் தீவிரமாக விமர்சிக்கப்பட்ட ஒன்றுதான். “VPF எனப்படும் திரைப்படம் ஒளிபரப்பும் புரொஜக்டருக்கான பணத்தை தயாரிப்பாளர்கள் இத்தனை ஆண்டுகளும் கொடுத்துவந்தார்கள். இனியும் ஏமாந்துபோய் அந்தத் தவறை செய்யமாட்டோம். புரொஜக்டர் வைத்திருக்க வேண்டியது தியேட்டர் உரிமையாளர்களின் பிரச்சினையே தவிர, அதற்கும் தயாரிப்பாளர்களுக்கும் இனி எவ்விதத் தொடர்பும் இருக்காது” என்று கூறியிருக்கிறார். அத்துடன், “அனைத்து டிக்கெட் விற்பனையையும் கணினிமயமாக்கி, திரைப்படத்தின் முழு வசூலும் கணக்குக் காட்டப்படும்போது, நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களின் சம்பளம் அதைப்பொறுத்து நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகும். ஆனால், இதற்காக இணையதளம் பராமரிக்கும் செலவை மக்கள் தலையில் சுமத்தக்கூடாது. ஏற்கனவே, புக்கிங் சார்ஜ் என்ற பெயரில் குறிப்பிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள் வசூலிக்கும் 30 ரூபாய் நீக்கப்படவேண்டும். உணவு, இருக்கை எனத் தியேட்டர்கள் ஒரு வரைமுறைக்குள் கொண்டுவந்தால் தான் மக்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள். அதேசமயம், அனைத்து மக்களுக்கும் ஒரே விலையில் டிக்கெட் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. அனைத்துப் பொருளாதார நிலையில் இருக்கும் மக்களும் தியேட்டருக்கு வரும் சூழலில் தான் சினிமாவின் வசூல் பெருகி தயாரிப்பாளருக்குப் பணம் கிடைக்கும். மக்களுக்கும் நல்லதொரு சினிமா அனுபவம் கிடைக்கும்” என்பன போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்காகவே இந்த வேலை நிறுத்தம் என விளக்கியிருக்கிறார் விஷால்.

ஆர்.கே.செல்வமணி சார்பில் திரையரங்க உரிமையாளர்களுக்கு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. சினிமாவைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே இந்த வேலைநிறுத்தம் நல்ல பயனை அளிக்கும்’ என்றும் ‘மூன்று லட்சம் தொழிலாளர்கள் பதினைந்து நாட்களுக்கும் மேலாக இழந்த கூலிக்கு நல்லதொரு விளைவு ஏற்படவேண்டும்’ என்றும் கூறியிருக்கிறார் செல்வமணி.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வெள்ளி 30 மா 2018