மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

பியூட்டி ப்ரியா: அழகும் எளிமையும்!

பியூட்டி ப்ரியா: அழகும் எளிமையும்!

நமது முன்னோர் இயற்கையான அழகு சாதனப் பொருள்களை உபயோகித்து அழகாகத்தான் இருந்தார்கள். அது மார்பகப் புற்றுநோய் என்பதே அறியாத உலகம். ஆனால், நவீன கலாசார மாற்றத்துக்கு ஏற்ப உண்ணும் பரோட்டா, கேக், பர்கர், துரித உணவுகள், அழகு சாதனப் பொருள்கள் எல்லாம் நம் பெண்களை புற்றுநோய்க்குப் பலியாக்கி வருகின்றன என்பதே உண்மை!

மார்பகப் புற்றுநோய், மலட்டுத் தன்மை, சிறுநீரகப் பாதிப்பு, பெண் சுரப்பிகள் செயலிழப்பு என அழகு சாதனப் பொருள்கள் பெண்களின் அழகான வாழ்வைக் கொல்லும் பொருள்களாக மக்களிடையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அழகு சாதனப்பொருள்களை நல்லதாகவும் தரமானதாகவும் பயன்படுத்துவதன்மூலம் பக்கவிளைவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

எப்போதும் பவுடர் மேக்கப் பயன்படுத்துவதே நல்லது. திரவ ஃபவுண்டேஷன் பயன்படுத்தினால், சிலிக்கானை அடிப்படையாகக்கொண்ட ஃபவுண்டேஷனைப் பயன்படுத்தலாம். இது சருமத்துக்கு நல்லது.

* பழைய அழகு சாதனப் பொருள்கள் குறிப்பாக, கண்களுக்கான அழகு பொருள்களில் வாங்கி சிறிது நாள்கள் ஆனதை பயன்படுத்தக் கூடாது. ஃபவுண்டேஷன் மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவற்றை ஓராண்டு வரை பயன்படுத்தலாம். மஸ்காரா மூன்று முதல் நான்கு மாதங்கள் வரையே பயன்படுத்த வேண்டும். பவுடர்கள் இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். மேலும், மேக்கப் பிரஷ் மற்றும் ஸ்பான்ஜ்களை அடிக்கடி முறையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

* கறுப்பு ஐ லைனர் மற்றும் மஸ்காராவைப் பயன்படுத்தவது நல்லது. ஏனென்றால், அவை அதிகளவில் அலர்ஜியைத் தோற்றுவிக்காது.

* பென்சில் ஐ லைனர் மெழுகை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படுவதோடு, அவற்றில் பதப்படுத்தும் பொருள் குறைவாகவே சேர்க்கப்படுகிறது. இதனால், பென்சில் ஐ லைனரைப் பயன்படுத்துவது நல்லது. திரவ ஐ லைனரில் சேர்க்கப்படும் லேட்டக்ஸ் மென்மையான சருமத்தினர் சிலருக்கு ஒவ்வாமையைத் தோற்றுவிக்கலாம்.

* அதிகபட்சமாக, பத்துக்கும் குறைவான பொருள்களை மட்டுமே சேர்த்துத் தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதே நல்லது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon