மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

ஹெல்த் ஹேமா: வயிற்றுவலியா?

ஹெல்த் ஹேமா: வயிற்றுவலியா?

கோடைக்காலத்தில் பலருக்கு வயிற்றுவலி பிரச்சினை சற்று அதிகமாக இருக்கும். இவர்கள் கோடைக்காலத்தில் கசப்பு சுவை கொண்ட பொருள்களைக் குறைவாகவும், கார்ப்பு சுவை கொண்ட பொருள்களைக் கொஞ்சம் கூடுதலாகவும் சாப்பிடலாம். பாசிப்பருப்பை வேகவைத்து சுமார் 30 நிமிடங்களுக்குப்பின், சுத்தம் செய்யப்பட்ட அரிசியைப் போட்டு வேக வைத்து அதில் சிறிய துண்டுகளாக வெட்டிய தாமரை தண்டைச் சேர்த்து கஞ்சி காய்ச்ச வேண்டும்.

இதை மிதமான சூட்டில் சாப்பிட்டுவந்தால் உடலின் வெப்பத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை ஏற்படுத்தும். வயிற்றுவலி பிரச்சினையில் இருந்தும் தப்பிக்கலாம். இளநீர் போன்ற உடலுக்குக் குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

மேல் வயிற்றில் வலி உண்டானால் அது இரைப்பைப் புண் அல்லது இரைப்பை அழற்சி காரணமாக இருக்கலாம்.

மலச்சிக்கல் காரணமாக வயிறு வலித்தால், வயிற்றுவலி மாத்திரையுடன், மலமிளக்கி மாத்திரை (எ.கா. பர்கோளக்ஸ்) ஒன்றை இரவில் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இரவு நேரத்தில் மட்டும் வயிற்றுவலி வந்தால் அதற்கு குடல்புழு காரணமாகும். இதற்கு குடல்புழு மாத்திரை (எ.கா. அல்பண்டசோல்) சாப்பிடலாம்.

சிறுநீர் கடுப்புடன் அடி வயிறு அல்லது கீழ் முதுகு வலித்தால் சிறுநீரகக்கல் காரணமாக இருக்கும். இதற்கு வயிற்றுவலி மாத்திரையுடன், 200 மி.லி. தண்ணீரில் இரண்டு கரண்டி ‘சிட்ரால்கா சிரப்’ கலந்து குடிக்கலாம். குளிர்ச்சியான பானங்கள் மற்றும் பழ ரசங்களைக் குடிக்கலாம்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon