மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

உர மானியம் 10% குறைப்பு!

உர மானியம் 10% குறைப்பு!

வருகிற 2018-19 நிதியாண்டில் பொட்டாசியம் சார்ந்த உரங்களுக்கான மானியத்தை மத்திய அரசு 10 சதவிகிதம் வரையில் குறைத்துள்ளது.

மார்ச் 28ஆம் தேதியன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பொட்டாசியம் உர மானியத்தை 10 சதவிகிதம் வரை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் பொட்டாசியம் உரங்களுக்கு வழங்கப்பட்ட மானியத் தொகை 10 சதவிகிதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாகிறது. இதன்படி பொட்டாசியம் உரங்களுக்கான மானியத் தொகை 2018-19 நிதியாண்டுக்கு ரூ.11,124 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.12,395 கோடியாக இருந்தது.’

பொட்டாசியம் உரம் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனம் ஒன்றின் உயரதிகாரி ஒருவர் லைவ் மின்ட் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்திய விவசாயத்துக்குத் தேவையான உரங்களை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறோம். 2017-18 நிதியாண்டில் 46 லட்சம் டன் அளவிலான பொட்டாசியம் உரத்தை இறக்குமதி செய்துள்ளோம். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 12 சதவிகிதம் அதிகமாகும். உர மானியம் குறைந்துள்ளதால் அடுத்த ஆண்டு இறக்குமதி குறையும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது” எனக் கூறியுள்ளார். சர்வதேச அளவில் பொட்டாசியம் உரம் இறக்குமதியில் உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon