மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

விடுமுறை எதிரொலி: இரவு 8 மணி வரை வங்கி!

விடுமுறை எதிரொலி: இரவு 8 மணி வரை வங்கி!

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று (மார்ச் 31) இரவு 8 மணி வரை செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மஹாவீர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளி ஆகிய தொடர் விடுமுறைகளால் கடந்த இரண்டு நாட்களாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நாளை (ஏப்ரல் 1ஆம் தேதி) ஞாயிறு என்பதால் விடுமுறை. நாளை மறுநாள் (ஏப்ரல் 2ஆம் தேதி) வங்கிகளின் ஆண்டுக் கணக்கு முடிக்கும் நாள் என்பதால் வங்கிகள் செயல்பட்டாலும் அன்றைய தினம் வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது. தொடர்ந்து ஐந்து நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளித்தால், மக்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்வதில் பாதிப்பு உண்டாகும் என்பதால், இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிவரை அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தவிர, ஆன்லைன் பரிவர்த்தனைகள் இரவு 12 மணிவரை செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த 2015 - 16 மற்றும் 2016 - 17ஆம் ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய மார்ச் 31ஆம் தேதியே கடைசி தினம். இதற்காகவும் விரிவான ஏற்பாடுகளை வருமான வரித் துறை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon