மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

இரண்டு மார்க்கெட்டுகளை பிடித்த மேகா

இரண்டு மார்க்கெட்டுகளை பிடித்த மேகா

மேகா ஆகாஷின் பெயர் கடந்த ஆண்டிலிருந்தே கோடம்பாக்கத்தில் அடிபட்டுவந்தாலும் இன்னும் அவர் நடித்த எந்தப் படமும் தமிழில் வெளியாகவில்லை. இந்நிலையில் அகில் அக்கினேனி நடிக்கும் தெலுங்குப் படத்தில் அவர் ஒப்பந்தமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேகா, நிதின் கதாநாயகனாக நடித்த ‘லை’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். ‘சல் மோகன் ரங்கா’ என்ற படத்தில் தற்போது நடித்துவருகிறார். இந்நிலையில் தனது மூன்றாவது தெலுங்குப் படத்தில் அகில் அக்கினேனியுடன் இணைந்து நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஆனால் அவர் இன்னும் ஒப்பந்தமாகி கையெழுத்திடவில்லை.

வெங்கி அத்லுரி இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் கடந்த மாதம் வெளியான தொலி பிரேமா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து நாகார்ஜுனா தனது இளைய மகன் அகிலுக்கு தொலி பிரேமா போல் நல்ல காதல் கதையை அமைக்கக் கூறியிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேகா ஆகாஷ் தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார். அதர்வா நடிக்கும் பூமராங், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு பக்க கதை ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon