மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

டிஜிட்டல் பரிவர்த்தனையில் புதிய சாதனை!

டிஜிட்டல் பரிவர்த்தனையில் புதிய சாதனை!

மார்ச் 28ஆம் தேதி பொது நிதி மேலாண்மை அமைப்பின் வாயிலாக ஒரே நாளில் ரூ.71,633 கோடி மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனை வரலாற்றில் ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச அளவு இதுதான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் 29ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பு ஒன்றில், ‘மார்ச் 28ஆம் தேதி பொது நிதி மேலாண்மை அமைப்பின் (PFMS) வாயிலாக மொத்தம் 98,19,026 டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ரூ.71,633 கோடியாகும். இதில், மாநில அரசுகளுக்குப் பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ.52,292 கோடி. அதேபோல, முதன்மைக் கணக்கு அலுவலகங்களால் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.13,040 கோடியாகும். மேலும், நேரடி பயன் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் ரூ.2,493 கோடியும், இதர பரிவர்த்தனைகளில் ரூ.2,472 கோடியும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

பொதுக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் அமைப்பால் அமல்படுத்தப்பட்ட இந்த பொது நிதி மேலாண்மை அமைப்புத் திட்டத்தில் அரசு கருவூலம் மற்றும் வங்கிகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளின் செலவு மற்றும் வரவு உள்ளிட்ட விவரங்கள் சரியான கண்காணிப்பில் சேகரிக்கப்படுகின்றன. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட இதர அரசுத் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளும் இந்த அமைப்பில் கண்காணிக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon