மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 மா 2018

தடுமாற்றத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம்!

தடுமாற்றத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம்!

இராமானுஜம்

தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிடுதல், அதற்கு அத்துறையில் அனுபவமிக்கவர்களின் பங்களிப்பு, இதனை அமல்படுத்த, முன்னெடுத்துச் செல்லத் தன்னலமின்றி பணியாற்றக் கூடிய நிர்வாகிகள் தேவை. இவை எதுவுமின்றி சாயம் போன துணி போன்று இருந்தது தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் மற்றும் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இருவரும் பத்திரிகையாளர்களிடம் பேசியது.

31 நாட்களைக் கடந்துகொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியபோது டிஜிட்டல் நிறுவனக் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் பிற தென்மாநில திரைத்துறையினருடன் இணைந்து போராடப்போவதாக அறிவித்தார் விஷால். மற்ற மாநில திரைத்துறையினர் இந்த பிரச்சினையில் ஏதோ ஒரு வகையில் சுமுகமான முடிவுக்கு வந்து மலையாளம், தெலுங்கு, கன்னட திரைத்துறை வழக்கம் போல் இயங்கிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள், மக்கள் நலன்களுக்காகவே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் என்கிறார் விஷால்.

சொந்தப் பணத்தை முதலீடாக வைத்து தொழில் செய்பவர் முதலாளி. திரைப்படத் தயாரிப்பில் அப்படி ஒரு இனம் இருந்தது அவர்களை முற்றிலும் அழித்து நிர்மூலமாக்கியது இன்றைக்கு முன்னணி நடிகர் முதல் சாமான்ய காமெடி நடிகர்கள்தான் என்பதை விஷாலே மறுக்க முடியாத உண்மை. நடிகரின் கால்ஷீட்டை வைத்து பைனான்சியரிடம் கடன் வாங்கி படம் தயாரித்து வெளியிடும் பைனான்ஸ் பொறுப்பாளர்கள்தான் இன்றைக்கு இருப்பவர்கள்.

எந்தவித திட்டமிடலும் இல்லாமல் வேலைநிறுத்தத்தை அறிவித்தபோது, இது தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையிலான பிரச்சினை, இதில் அரசு தலையிடவோ அல்லது அரசிடம் முறையிடவோ வேண்டியதில்லை என்றார் விஷால். இப்போது கோட்டை நோக்கி பேரணி, முதல்வரிடம் மகஜர் என அறிவிப்பை வெளியிடுவதிலிருந்து, இந்தப் போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்பதில் அறிவு சார்ந்த தெளிவான பார்வையும் விட்டுக் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தும் சகிப்புத்தன்மையும் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.

திரையரங்கு உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தோடு நடத்தப்பட்டதாக தெரியவில்லை. ஏதாவது ஒரு சங்க அலுவலகத்தில் நடைபெற வேண்டிய பேச்சுவார்த்தைக்கான கூட்டுக் கூட்டம் காஸ்மோபாலிட்டன் பொழுதுபோக்கு கிளப்பில் நடத்திய போதே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இலக்கின்றி பயணிப்பது உறுதியானது.

என்னதான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக தற்போதைய தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் இருந்தாலும் இந்த பிரச்சினையை அறிவுப்பூர்வமாக சகிப்புத்தன்மையுடன் பேசக்கூடிய ஆளுமைகள் இல்லாததன் விளைவு சுமுகமான முடிவுக்கு இரு தரப்பும் வரமுடியவில்லை.

தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது அடுத்தடுத்து கூடுதலாக வைத்திருக்கும் டிக்கெட் கட்டண பிரச்சினை, ஆன்லைன் புக்கிங் கட்டணம் இரண்டை பற்றியும் சரியான புரிதல் இல்லாததன் விளைவாக பெரிய விஷயமாக பேசப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வைத்திருக்கும் அனைத்து கோரிக்கைகளும் நியாயமான கோரிக்கைகள் எனக் கருதப்பட்டாலும் அதனை திரையரங்கு உரிமையாளர்களிடம் நட்பு ரீதியாக பேசி இரு தரப்பு சிரமங்களையும், கஷ்டங்களையும் எப்படி சரி செய்வது என்று பேசக்கூடிய மூன்றாவது தரப்பு பங்களிப்பைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அது தமிழக அரசாக இருக்க முடியாது.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

சனி 31 மா 2018