மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

மோசடியால் கோடிகளை இழந்த வங்கிகள்!

மோசடியால் கோடிகளை இழந்த வங்கிகள்!

2016-17 நிதியாண்டில் இந்திய வங்கிகள் சுமார் 12,533 மோசடிகளால் ரூ.18,170 கோடியை இழந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆலோசனை நிறுவனமான இன்ஸ்டிடியூசனல் இன்வெஸ்டார் அட்வைசரி சர்வைசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ’2016-17 நிதியாண்டில் இந்திய வங்கிகளிலேயே அதிகபட்சமாக பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் மொத்தம் 3,893 நிதி மோசடிகள் நடந்துள்ளன. அதைத் தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கிகளிலும் அதிகமான மோசடிகள் நடந்துள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மொத்தம் ரூ.13,000 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.2,810 கோடி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.2,420 கோடி மதிப்பிலான பரிவர்த்தனை மோசடிகள் நடந்துள்ளன. மகாராஷ்டிரா வங்கியின் மொத்த சொத்துகளில் 19 சதவிகிதம் செயற்படா சொத்துகளாக உள்ளன. இந்திய வங்கிகள் 2016-17 நிதியாண்டில் மொத்தமாக ரூ.18,170 கோடிகளை மோசடி வாயிலாக இழந்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வங்கிகளில் வாராக் கடன் பிரச்சினையும், போலியான ஆவணங்களைக் கொண்டு நிதி மோசடி செய்யும் நடவடிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,700 கோடி மோசடி செய்த விவகாரத்தில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி சிக்கினார். எனினும் அவர் மீது நடவடிக்கை பாயும் முன்னரே வெளிநாடு தப்பிவிட்டார். எனவே, ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெறுபவர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களைக் கட்டாயம் பெறும்படி வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கி மோசடிக்கு எதிராக அரசு தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், நிதி மோசடிகள் குறைந்தபாடில்லை.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon