மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

உண்மை பேசிய சுசீந்திரனுக்கு ஏற்பட்ட நிலை!

உண்மை பேசிய சுசீந்திரனுக்கு ஏற்பட்ட நிலை!

சுசீதிரன் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது அடுத்தடுத்த படங்கள் பற்றியும் தற்போதைய தனது பணிகள் குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஏஞ்சலினா, ஜீனியஸ் என இரண்டு படங்களை முடித்துவிட்டு இந்த ஆண்டு தனது மூன்றாவது படமான சாம்பியன் படத்தைத் தொடங்கவுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது முதல் படத்திலேயே தயாரிப்பாளர் உட்பட பல புதுமுகங்களுடன் இணைந்து வெற்றி பெற்றவன் நான் ஒருவன்தான், கடந்த பத்து ஆண்டுகளில் (கர்வம் அல்ல). இந்த வருடம் ஐந்து புதிய தயாரிப்பாளர்கள், ஐந்து ஹீரோக்களையும் அறிமுகப்படுத்துகிறேன். எனது மூன்றாவது படமான `சாம்பியன்' ஃபுட் பால் திரைப்படத்தை ஸ்ட்ரைக் முடிந்து துவங்க உள்ளேன். மற்ற இரண்டு படங்களின் அறிவிப்புகளை விரைவில் வெளியிடுகிறேன். இந்த வருடம் முழுக்க முழுக்க புதுமையான கதைக்களத்துடன் பயணிக்கப்போகிறேன். இதற்கு ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார் .

திரையுலகின் இன்றைய சூழ்நிலையில் தான் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை அவர் கூறியுள்ளார். “இதுவரை நான் கடன் வாங்கி படம் எடுத்ததில்லை. இருந்தபோதும் அசோக்குமார் அண்ணனின் மரணம் குறித்துப் பேசியதால் பைனான்சியரிடம் பணம் வாங்கும் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் என்னுடன் படம் பண்ணத் தயங்குகிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை” என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon