மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

வருமான வரி கணக்கு: இன்றுடன் நிறைவு!

வருமான வரி கணக்கு: இன்றுடன் நிறைவு!

வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று (மார்ச் 31) சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்ததாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2017-18 நிதியாண்டுக்கான வருமான வரி செலுத்துவது மற்றும் கடந்த நிதி ஆண்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் தங்களது வரிக் கணக்கை மார்ச் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் 2016-17 நிதியாண்டுக்கான வரிக் கணக்கை திருத்தம் செய்வதற்கும் இன்று இறுதி நாளாகும்.

இதுகுறித்து, வருமான வரித் துறை முதன்மை ஆணையர் சங்கரன் தெரிவிப்பதாவது: "சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், கிரீம்ஸ் சாலை மற்றும் தாம்பரத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகங்களில் இன்று வரி செலுத்த கடைசிநாள் என்பதால் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்தச் சிறப்பு கவுண்டர்களில் பொதுமக்களுக்கு உதவுவதற்குத் தேவையான அலுவலர்கள் இன்று பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

அதேபோல தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களில் உள்ள வருமான வரித் துறை அலுவலகங்களிலும் தேவைக்கு ஏற்ப கவுண்டர்கள் இன்று திறக்கப்பட்டிருந்தன.

இன்று மாலை 6 மணி வரை சிறப்பு கவுண்டர்கள் செயல்பட்டன. இதில் 2016-2017ஆம் ஆண்டுக்கு 71 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை இன்று வருமான வரி வசூலிக்க இலக்கு நிர்ணயித்திருந்தோம். மேலும் இந்தியன் வங்கிகளிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது."

இதனிடையே, வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு வசதியாக, ரிசர்வ் வங்கியின் அனைத்துக் கிளைகள் மற்றும் வருமான வரித் துறை அலுவலகங்களும் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் எலெக்ட்ரானிக் பணப் பரிமாற்றங்களும் இன்று நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும். ஏப்ரல் 1 மற்றும் 2 தேதிகள் விடுமுறை என்பதால் வாடிக்கையாளர்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக இன்று இரவு 8 மணி வரை வங்கிகளைத் திறந்து வைக்க முடிவு செய்யதுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon