மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

’நூறு நாள் வேலை’ திட்டத்தின் சம்பளம் உயர்வு!

’நூறு நாள் வேலை’ திட்டத்தின் சம்பளம் உயர்வு!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் தினக்கூலி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள்,வாய்க்கால்களைத் தூர் வாருதல், குளம் வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதில், தினக்கூலியாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.205 வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்ட தினக்கூலி 205 ரூபாயில் இருந்து 224 ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத் திட்டம் செயல்பட்டுவருகிறது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் தினக்கூலியாக ஒருவருக்கு 205 ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது.

தற்போது, நூறு நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்தில் 205 ரூபாயில் இருந்து 224 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்தத் திட்டம் எந்தளவில் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிறது என்று தெரியவில்லை

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon