மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

CM வேண்டாம் CMB தான் வேண்டும் -அப்டேட் குமாரு

CM வேண்டாம் CMB தான் வேண்டும் -அப்டேட் குமாரு

மெரினால போராட்டம் நடக்குது, போலீஸ் கைது செய்யுதுனு ஒரே பரபரப்பா இருந்த சூழல்ல ஒருத்தர் ஃபோன் போட்டு ‘ரஜினி மெரினா பக்கம் வர்றாராமே’ன்னு கேட்டார். ஒருவேளை உண்மையா இருக்குமோன்னு மன்ற ஆள் ஒருத்தருக்கு ஃபோன் போட்டு கேட்டா, ‘அதெல்லாம் இருக்காது குமாரே! அப்டியே வந்தாலும் லெஃப்ட் எடுத்து கபாலீஸ்வரர் கோவிலுக்கு போய்டுவாரு. நாங்க ஆன்மீக அரசியல்னு தெரியாதா உனக்கு’ன்னு அவர் சொன்ன பதில்ல உச்சி குளுந்து போய் கமல் டீமுக்கு ஃபோன் போட்டா, ‘ப்ரோ டிஸ்டர்ப் பண்ணாதீங்க. கிறிஸ்டோஃபர் நோலன் கூட எடுத்த ஃபோட்டோவை எடிட் பண்ணிட்ருக்கோம். அப்பறமா பேசுங்கன்னார். வேலை மெனக்கெட்டு உங்களுக்கு ஃபோன் பண்ணா, என்னா டிரிக்ஸா என்னையே கலாய்க்கிறீங்க. முதலமைச்சரும், துணை முதல்வரும் ஒழுங்கா உண்ணாவிரதத்துல பேர் குடுத்துருந்தா இந்த பிரச்சினை வந்திருக்காதேன்னு, உடனே ஒரு ர.ர-க்கு ஃபோன் போட்டேன். ஏன்யா உங்க தலைவருங்க உண்ணாவிரதத்துல கலந்துக்கலன்னு எடுத்ததும் கேட்டேன். அவங்களே யார் பெரியவர்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. எடப்பாடி பேர் வேண்டாம்னு ஓ.பி.எஸ்ஸும், ஓ.பி.எஸ் பேர் வேண்டாம்னு எடப்பாடியும் நீக்கிட்டாங்களோன்னு டவுட்ல இருக்கேன். ஏன்யா என்னை நோண்டிகிட்டு இருக்கன்னுட்டாப்ல. அன்புள்ள தமிழக முதல்வரே, உங்களுக்கு கட்சி பிரச்சினைல இருந்து, மேலிடத்தை சந்தோசப்படுத்துற வரைக்கும் ஆயிரம் பிரச்சினை இருக்கு. எங்க பிரச்சினையை எங்ககிட்ட உட்ருங்க. அந்த மெரினால போட்ருக்க 144 தடையை மட்டும் ஒரு 2 நாளைக்கு தள்ளி வைங்க. நாங்க பாத்துக்குறோம். நீங்க அப்டேட்டைப் படிங்க. நான் போய் கிறிஸ்டோஃபர் நோலனைப் பாத்துட்டு, என்னோட அப்டேட் குமாரு போஸ்டெல்லாம் படிச்சாரா இல்லையான்னு கேட்டுட்டு வர்றேன். இல்லைனு சொன்னாலும் படிச்சாராம்னு தான் சொல்வேன்.

Subbu Raman J

ட்ரெயினுக்கு பெடல் போட்டுட்டு வாரானுங்க போலிருக்கு... இன்னும் சற்று நேரத்தில் னு பதினாலு முறை சொல்லிட்டானுக...

Moorthy Manz

இந்த பேஸ்புக் வாட்சப் வதந்தியால வந்த நன்மை என்னனா எவனையும் ஈசியா நம்ப கூடாது அப்படிங்குறது தீமை என்னனா எவன பார்த்தாலும் சந்தேகமாவே பார்ப்பதும்தான்..

சில வேளைகளில் இருப்பவனுக்குதான் அந்த கவலை தெரியும்....

டான் DON டான்

காவிரியில தண்ணி பொங்கி வந்தா எப்டி மணல் அள்ளறதாம்... அப்புறம் இப்போதைய மணல் கான்ட்ராக்டர் யார்னு சொல்ல வேண்டியதில்லை

SKP KARUNA

"வேடிக்கைப் பார்க்கும் தமிழகமே வீதிக்கு வந்துப் போராடு".

மெரினாவில் கைது செய்து அழைக்கப்பட்டுச் செல்லும் இளைஞர்களின் முழக்கம்.

மெத்த வீட்டான்

மெரினா நமக்கான உரிமையை பெற்றுத்தரும்..எங்களுக்கு இந்த CM வேண்டாம் CMB தான் வேண்டும்!

எனக்கொரு டவுட்டு

அதிமுக எம்பிக்கள் தற்கொலைக்கு உதவ தயார் : புகழேந்தி அறிவிப்பு

எவ்வளவு அழகா கோர்த்து விடுது பாரு..!

Janani

14.47 லட்சம் ஹெக்டேர் நிலம் கொண்ட காவிரி டெல்டாவை பாலைவனமாக்க போகிறோமா?? இதற்கு விடிவே இல்லையா!!

கவி தா

அ.தி.மு.க உண்ணாவிரதப் பட்டியலில் பழனிசாமி, பன்னீர்செல்வம் பெயர் மிஸ்சிங்!

ரெண்டு பேரும் "ஆஸ் ஐ ம் சபரிங் ஷுகர்னு..." டாக்டர் சர்ட்டிபிகேட் வாங்கியாச்சா பேஷண்ட்டுகளே

திருந்தாதவன்

காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காத காவி பண்டாரங்களே நீட் தேர்வை மட்டும் ஏன் நடைமுறை படுத்துகிறாய்

திராவிடன்

ஏப்.3ல் உண்ணாவிரதம் இருக்கும் அதிமுகவினர் பட்டியல் வெளியீடு- செய்தி

உண்ணாவிரதம் இருக்கவே பட்டியல் வெளியிடும் ஒரு கோஷ்டி இருக்குதுனா அது நம்ம ஒத்தரோசா கோஷ்டிதான்....

வாழை.வை.சுபா

நாக்கை பந்தியிலும்,சபையிலும் கட்டுப்படுத்த தெரிந்தவனே ஆரோக்கியமான அறிவாளி!!

ரஹீம் கஸாலி

அடிக்கற வெயிலுக்கு எங்காவது தண்ணீர் இருக்கற இடமா பார்த்து உட்கார்ந்தா தேவலைன்னு தோணுது. ஆனால் கண்ணுக்கு எட்டும் தூரம் கானல் நீர் மட்டும்தான் தெரியுது.

அஜ்மல் அரசை

தீர்ப்பு தெளிவாக இருக்கும் போது 3 மாத அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு - ஜெயக்குமார்

விஞ்ஞானி உங்களுக்கு தெரியுது கூமுட்டை அவனுகளுக்கு தெரியலையே...

HAJAMYDEENNKS

சுப்ரீம் கோர்ட் இனி டெல்லி மேப்ல மட்டும்தான் இருக்கும் போல !

செல்லக்குழந்தை

நேர்மை விலைபேசப்படுகிறது , அடுத்தவர் சூழ்நிலைக்கும், தன் சுயநலத்திற்கும் ஏற்றார் போல்...

அன்புடன் கதிர்

முகம் துடைக்க தனது ஷாலை நீட்டும் தங்கையும் தோழியும் தாய்மையின் மறுவடிவம் !!!

அமீர்

இன்றைய சூழலில் குறைவாக லஞ்சம் வாங்குபவர்கள் நல்ல '#ஆஃபிஸர்ஸ்' என்றழைக்கப்படுகிறார்கள்

கோழியின் கிறுக்கல்!!

நல்ல மனைவி அமைவதை விட நல்ல மச்சான், சகலை அமைவது தான் கடினம்!!!

Aadhavan Dheetchanya

Scam என்றால் உடனே செய்திருப்போம். இதென்னவோ Scheme என்பதால் தான் விளக்கம் கேட்கிறோம்- பாஜக காவிரி

Satheesh lakshmanan

காவிரி - உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க முடியாது

ஸ்டெர்லைட் - சட்டவிதிமீறல்கள்

நியூட்ரினோ - சட்டங்கள் கட்டுப்படுத்த முடியாத சிறப்பு அந்தஸ்து.

காவிரி டெல்டா - எண்ணெய் எடுக்க HELP,NELP, OALP போன்ற புதிய சட்டங்கள்

தமிழகம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.

-லாக் ஆஃப்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon