மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

சென்னை: மல்லிகை விலை சரிவு!

சென்னை: மல்லிகை விலை சரிவு!

சென்னை பாரிமுனை மலர் சந்தையில் ஆந்திரா மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து மல்லிகை வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.

மல்லிகை விலை குறைந்துள்ள நிலையில் ரோஜா விலை அதிகரித்துள்ளது. தற்போது மல்லிகை கிலோ ஒன்றுக்கு ரூ.240 ஆக விற்கப்படுகிறது. மல்லிகை வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரோஜா பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.120லிருந்து ரூ.160 ஆக உயர்ந்துள்ளது. சாமந்தியின் வரத்து குறைந்துள்ளதால் கிலோ ஒன்றுக்கு ரூ.160 ஆக விற்பனையாகிறது. கும்கி சாமந்தி வரத்து தற்போது துவங்கியுள்ள நிலையில் இதன் விலை, சில்லறை விற்பனையில் கால் கிலோ, ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது.

இதற்கிடையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீட்ரூட், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. கிலோ ஒன்றுக்குப் பட்டாணி விலை ரூ.60 முதல் ரூ.75 வரையும், பீன்ஸ் ரூ.25 ஆகவும், அவரை விலை ரூ.25 ஆகவும், தக்காளி விலை ரூ.15 ஆகவும், வெங்காயம் விலை ரூ.30 ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.14 ஆகவும் உள்ளது. தற்போது சென்னையில் வெயில் அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon