மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

மெஸ்ஸி ரிட்டர்ன்ஸ்!

மெஸ்ஸி ரிட்டர்ன்ஸ்!

லா லீகா தொடரின் நாளைய (ஏப்ரல் 1) லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி, செவில்லா அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லா லீகா தொடரில் இதுவரை விளையாடிய 29 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் பார்விலோனா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பார்சிலோனா அணி கடைசியாக அர்ஜென்டினா அணியுடன் விளையாடிய போட்டியில் காயம் ஏற்பட்டதால் லியோனல் மெஸ்ஸிக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பார்சிலோனா அணி செவில்லா அணியுடன் நாளை நடைபெறவிருக்கும் லீக் போட்டியில் மோத உள்ளது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி பங்கேற்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். நேற்று வெளியான தகவலின்படி, மெஸ்ஸி முழு உடல் தகுதியுடன் இந்தப் போட்டியில் விளையாடத் தயாராக உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செர்ஜியோ புஸ்கெட்ஸ், லூகாஸ் டிக்னே இருவரும் காயம் காரணமாக அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அலெக்ஸ் விடல், யெர்ரி மினா ஆகிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. பார்சிலோனா அணி இந்த போட்டியிலும் தோல்வியைச் சந்திக்காமல் இருந்தால் தொடர்ச்சியாக 30 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் விளையாடிய அணி என்ற பெருமையைப் பெறும். இதுவரை 39 போட்டிகளில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் பார்சிலோனா அணி 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் செவில்லா அணி வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகள் சமனில் முடிவடைந்தன.

நாளை நடைபெறவிருக்கும் இந்த போட்டியைத் தொடர்ந்து பார்சிலோனா அணி சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டியில் ரோமா அணியுடன் புதன்கிழமை விளையாட உள்ளது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon